
மதுரை-தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு இடையிலான இரட்டை ரெயில் பாதைக்கு ‘நிதி ஆயோக்’ அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.3,617 கோடி
இதையடுத்து, ரூ. 3 ஆயிரத்து 617 கோடியில் இந்த இரட்டை ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
நீண்டநாள் கோரிக்கை
தென் மாவட்ட மக்களின் நீண்ட காலக்கோரிக்கையும், நிதி ஒதுக்கப்படுமான என்ற நிலையற்ற தன்மையும் இந்த அறிவிப்பு மூலம் நீங்கியுள்ளது.
ரூ.1,431 கோடி
இதன்படி 86.56 கி.மீ. தொலைவு கொண்ட திருவனந்தபுரம் சென்ட்ரல்-கன்னியாகுமரிரெயில்வே இரட்டைப் பாதைக்கு ரூ. ஆயிரத்து 431.90 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை-தூத்துக்குடி
இதேபோல மதுரை-தூத்துக்குடி இடையிலான 160கி.மீ. தொலைவுக்கு இரட்டைரெயில் பாதை அமைக்க ரூ. ஆயிரத்து 182 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. ரூ. ஆயிரத்து3 கோடி வாஞ்சிமணியாச்சி முதல் நாகர்கோயில் சந்திப்புவரை இரட்டைரெயில் பாதை அமைக்க மதிப்பிடப்பட்டுள்ளது.
நிம்மதி
ரெயில்வே துறை நீண்டகாலமாக கடும் நிதிப்பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்ததால், இந்த 3 வழிப்பாதைகளுக்கும்,தேவைப்படும் நிதியை கேரளா, தமிழக மாநிலங்கள் 50 சதவீதத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோரி இருந்தது. இந்நிலையில் நிதி ஆயோக்கில் இருந்து இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்து இருப்பது இரு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய மனநிம்மதியை அளித்துள்ளது.
வாரியத்திடம் ஒப்புதல்
இது குறித்து ரெயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மதுரை-தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி ஆகிய 3 தடங்களுக்கும் இரட்டை பாதை அமைக் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இனி அடுத்ததாக, இரட்டை ரெயில்பாதை அமைப்பது குறித்து மண்டலங்கள் அளிக்கும் மதிப்பீட்டு அறிக்கையை ரெயில்வே வாரியத்தில் அளித்து ஒப்புதல் பெற வேண்டும்.
ரெயில்வே வாரியத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்தபின், மாநில அரசுகள் இந்த இரட்டைபாதைக்கான நிலம் கையகப்படுத்துதலை விரைவுப்படுத்த வேண்டும்.ெரயில்வே வாரியமும் பாதை அமைக்கும் ஒப்பந்தபுள்ளிகளைக் கோரும்.
இதில் திருவனந்தபுரம் சென்ட்ரல்-கன்னியாகுமரி இரட்டைபாதை அமைக்கும் பணி திருவனந்தபுரம் மண்டலத்தின் கீழ்வரும். இதன் மதிப்பு ரூ.950 கோடியில் இருந்து ரூ.1431.9 கோடி வரை இருக்கும். இறுதிக்கட்ட ஆய்வுப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.’’ என்றார்.
மேலும், எர்ணாகுளம் தலைமை நிர்வாக அதிகாரி(கட்டுமானம்) தலைமையில் இந்த இரட்டை பாதை பணிகள் முழுமையும் நடைபெறும்.
கூடுதல் ரெயில்கள்
இப்போது திருவனந்தபுரம் முதல் சென்னை வரை நாகர்கோயில், நெல்லை, மதுரை, திண்டுக்கல் வழியாக மின் வழிப்பாதை அமைக்கப்பட்டு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரெயில்பாதைஅமைக்கப்படும் போது, இன்னும் கூடுதலாக ரெயில்கள் நாகர்கோயில், மதுரை வழியாக இயக்க முடியும்.
மேலும், அடுத்து வரஉள்ள விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல்துறைமுகம் இயங்கும்போது இந்த ரெயில்பாதை மிகுந்த உதவியாக இருக்கும்.