தமிழகம் முழுவதும் இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6 ஆவது வாரத்திலும், 14 ஆவது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் சமையல் செய்ய தடை; அதிகாரிகள் உத்தரவு
இதை தவிர போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9 ஆவது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன. அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்க வழங்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை; அனைவருக்கும் பொதுவானவன் - உயநிதி ஸ்டாலின்
அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்களில் இன்று சொட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன.