திருநங்கையுடன் உல்லாசம்... காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Published : Dec 05, 2018, 03:37 PM ISTUpdated : Dec 05, 2018, 03:40 PM IST
திருநங்கையுடன் உல்லாசம்... காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சுருக்கம்

சென்னை துரைப்பாக்கத்தில் இரவு நேரத்தில் திருநங்கையுடன் உல்லாசமாக இருந்த சதீஷ் சத்தியராஜ் என்ற காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தில் இரவு நேரத்தில் திருநங்கையுடன் உல்லாசமாக இருந்த சதீஷ் சத்தியராஜ் என்ற காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சாலையின் ஓரத்தில் திருநங்கைகள் நின்று வாகன ஓட்டிகளை கவறும் வண்ணம் அரை நிர்வாணத்துடன் நின்றிருப்பது வழக்கமாய் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் போலீசார் கண்டுக்கொள்வதில்லை. மேலும் பள்ளிக்கரணை வனப்பகுதியில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு வசதியாக துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஓரத்தில் புதர் சூழ்ந்துள்ளது. 

இதனை வசதியாகக் கொண்ட திருநங்கைகள் வாகன ஓட்டிகளிடம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் அடாவடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் 2ம் நிலை காவலராக பணிபுரிபவர் சதீஷ் சத்தியராஜ். இவர் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள புதர்பகுதியில் திருநங்கையுடன் சீருடையில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் அவரை மடக்கி பிடிக்க முயற்சித்த போது தெறித்து ஓடி சேற்றில் விழுந்து தப்பிக்க முயற்சித்தார், ஆனாலும் அவரை மடக்கி பிடித்தனர்.

 

இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் காவலர் சதீஷ் சத்தியராஜ் அழைத்துச் சென்றனர். பின்னர் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் சதீஷ் சத்தியராஜ் என்ற காவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நேற்று ரூ.800 குறைந்த தங்கம்.. இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? நகை வாங்க இதுதான் சரியான நேரமா?
போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.. பை பையாக அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.?