இனி மழை பெய்தாலும் பள்ளிகளுக்கு லீவு கிடையாது... பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

By vinoth kumarFirst Published Dec 5, 2018, 12:38 PM IST
Highlights

மழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பாக ஆட்சியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது, மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

மழை பெய்யும் காலங்களில் தற்போது அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர். இந்நிலையில் மழை விடுமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதில் இனி பள்ளிகளுக்கு மழை பெய்த உடனேயே விடுமுறை விடக்கூடாது. மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 சிறு தூறல் விழுந்தால் உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது. மேலும் பள்ளிகள் தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் மழை விடுமுறை தொடர்பாக முடிவெடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம். திருவிழா போன்ற உள்ளூர் விடுமுறை அறிவித்தால் அதற்கு ஈடுசெய்யம் வகையில் சனிக்கிழமை வகுப்புக்கள் நடத்த வேண்டும். 

விடுமுறை காரணமாக பாடத்திட்டம் ஏதும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ்  சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!