டாய்லெட், பெட்ரூம், ஹேங்கர்... எங்கு பார்த்தாலும் ரகசிய கேமரா!! மகளிர் விடுதியில் பயங்கரம்

Published : Dec 04, 2018, 10:38 AM ISTUpdated : Dec 04, 2018, 10:45 AM IST
டாய்லெட், பெட்ரூம், ஹேங்கர்... எங்கு பார்த்தாலும் ரகசிய கேமரா!! மகளிர் விடுதியில் பயங்கரம்

சுருக்கம்

சென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமரா பொறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து படம் பிடித்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமரா பொறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து படம் பிடித்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அப்படி வரும் பெண்கள் பலர் பிஜி(பேயிங் கெஸ்டில்) தங்குகின்றனர். பாதுகாப்பு கருதி பல பெண்கள் ஒரே இடத்தில் தங்குகின்றனர். இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் பெண் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த பெண்கள் விடுதியை சஞ்சீவ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த விடுதியில் உள்ள பெண்கள் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த பெண்கள் அவ்வப்போது சீரமைப்பு பணிகளும் நடைபெற்றது. ஆனால் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் செய்வதாக கூறி அடிக்கடி ஏதேதோ செய்துள்ளார் சஞ்சீவ். இதனையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. விடுதியில் எங்காவது ரகசிய கேமரா வைக்கப்பட்டிருக்கிறதோ என்பது குறித்து ஆராய தொடங்கினர். 

இதனையடுத்து தங்களது மொபைலில் உள்ள செல்போன் செயலி ஹிட்டன் கேமரா டிடக்டர் மூலம் விடுதி அறையில் ரகசிய கேமராக்கள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இதனை கண்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். யாருக்கும் தெரியாமல் கழிவறை, படுக்கையறை, துணி மாட்டும் கைப்பிடி (ஆங்கர்) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்களுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்களை சஞ்சீவ் வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக உடனே ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து எந்த கெடுகெட்ட செயலில் ஈடுபட்ட சஞ்சீவ் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீ பெண்கள் துணிக்கடையில் உடை மாற்றும் அறைக்கு செல்லும் போதும் உஷாராக இருக்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?