குடிபோதையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது...

First Published Feb 13, 2018, 7:49 AM IST
Highlights
Policeman arrested for trying to rape a 13-year-old girl


வேலூர்

வேலூரில் தங்கும் விடுதி அறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துவந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரரை காவலாளர்கள் கைது செய்தனர்.

சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (42). இவர் சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றினார். பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவர் வசிக்கும் பகுதியில் துணி சலவை செய்யும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் இரண்டாவது மகளுக்கு 13 வயது. இவர் 8-ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அந்த சிறுமியும் செல்வகுமாரை தந்தையாகவே பார்த்து பார்த்து பழகிவந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த சிறுமியை, உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி சென்னையில் இருந்து வேலூருக்கு நேற்று முன்தினம் மாலையில் காரில் அழைத்து வந்துள்ளார். வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அன்று நள்ளிரவில் செல்வகுமார் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் அலறிய சிறுமி கழிவறைக்குச் சென்று உள்ளே பூட்டிக் கொண்டாள்.

சிறுமியின் சட்டைப்பையில் செல்வகுமாரின் செல்போன் இருந்ததால் கழிவறையில் இருந்து அவசர உதவி எண்ணாண 100-ஐ தொடர்பு கொண்டு, “வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள அந்த தங்கும் விடுதியின் பெயரை கூறி, தன்னிடம் செல்வகுமார் தவறாக நடக்க முயற்சி செய்கிறார். நான் கழிவறையில் பதுங்கி உள்ளேன். எனக்கு பயமாக உள்ளது. என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறியுள்ளார்.

உடனே சென்னை கட்டுப்பாட்டு அறை காவலாளார்கள் வேகமாக செயல்பட்டு வேலூர் வடக்கு காவலாளர்களை தொடர்பு கொண்டு நடந்தை கூறினர். அதைத்தொடர்ந்து வடக்கு போலீசார் உடனடியாக அந்த தங்கும் விடுதிக்கு சென்றனர்.

இதனிடையே சிறுமி கழிவறை சென்று வெகுநேரமாகியும் திரும்பாததால் செல்வகுமார் கழிப்பறைக்கு சென்றுள்ளார். கதவு பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டியவாறு சிறுமியிடம், "கதவை திறக்குமாறு" மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், தனது செல்போன் சிறுமியிடம் உள்ளதையும், விடுதிக்கு காவலாளர்கள் வருவதையும் தெரிந்துகொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

தங்கும் விடுதிக்கு சென்ற காவலாளர்கள் அந்த சிறுமியை மீட்டனர். மேலும், செல்வகுமாரின் செல்போன் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய செல்வகுமாரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சுற்றித்திரிந்த அவரை நேற்று காலை காவலாளார்கள் பிடித்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு காவலாளர்கள் வழக்குப்பதிந்து  அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

click me!