செந்தில் பாலாஜி வழக்கில் 900 பேர் குற்றவாளிகள்: மத்திய குற்றப் பிரிவு போலீஸ்!

By Manikanda Prabu  |  First Published Jan 3, 2024, 8:11 PM IST

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்


செந்தில் பாலாஜி, கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயா் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

Tap to resize

Latest Videos

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சம்பந்தப்பட்ட மத்திய குற்றப் பிரிவு காவல் துறை அதிகாரிகள் செயல்படுத்த தவறியதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி வழக்கை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

அதன்படி, செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, விசாரணை நடத்திய மத்திய குற்றப் பிரிவு காவல் துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஜன.8ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!

இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது, குற்றவாளியாக சேர்க்கப்பட சில போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் தங்களை தேவையின்றி வழக்கில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கூடுதல் குற்றபத்திரிக்கையில் சுமார் 900 பேர் வரை சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, அனைவருக்கும் விசாரணை அனுமதி கிடைத்தவுடன்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்க முடியும் எனக் கூறி, விசாரணை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.

click me!