மதுரையில் பணம் செலுத்தும் ஏடிஎம் - யில் கவனக்குறைவால் பெட்ரோல் பங்க் மேலாளர் ஒருவர் தவறவிட்டு சென்ற 40 ஆயிரம் ரூபாயை, நேர்மையோடு எடுத்து வந்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்களுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.
மதுரை மாநகரில் பெட்டோல் நிலைய மேலாளராக பணிபுரியும் சரவணன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காமராஜர் சாலை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில், 40 ஆயிரம் ரூபாய் பணத்தினை டெபாசிட் செய்துள்ளார். அப்போது இயந்திர கோளாறு காரணமாக பணம் உள்ளே செல்லாமல் வெளியே வந்துள்ளது. ஆனால் பணிக்கு செல்லும் அவசரத்தில் அதனை சரியாக கவனிக்காமல், அங்கிருந்து சரவணன் கிளம்பியுள்ளார்.
மேலும் படிக்க: கல்லூரி பேருந்து லாரி மீது மோதி விபத்து.. குடிபோதையில் ஓட்டுநர் இருந்ததாக குற்றச்சாட்டு.. 13 மாணவிகள் காயம்..
இந்நிஅலியில் ஏடிஎம்- யில் அவருக்கு அடுத்ததாக பணத்தை செலுத்த காத்து கொண்டிருந்த மதுரை தமிழன் தெரு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துராஜ், சதீஷ் ஆகியோர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை பார்த்துள்ளனர். மேலும் அருகில் இருந்த தெப்பக்குளம் காவல்நிலையத்தில் அந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர். அங்குள்ள போலீசாரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.
பின்னர் இதுக்குறித்து விசாரணை நடத்திய தெப்பக்குளம் காவல்துறையினர், ணத்தை தவறவிட்ட சரவணனை அழைத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். மேலும் பெட்ரோல் நிலைய மேலாளர் தவறவிட்ட பணத்தை நேர்மையாக எடுத்து அதனை காவல்நிலையத்தில் பொறுப்போடு ஒப்படைத்த இளைஞர்களுக்கு காவல்துறையினர் தங்கள் பாராட்டுதல்களை தெரிவித்தனர். மேலும் தெப்பக்குளம் காவல் நிலைய சரக துணை ஆணையர் முத்துராஜ், தொழிலாளர்கள் முத்துராஜ், சதீஷை பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
மேலும் படிக்க: சத்து மாத்திரை மற்றும் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம்,வயிற்றுவலி.. மருத்துவமனையில் அனுமதி..