
திருவாரூர்
வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகாததால் காவல் ஆய்வாளருக்கு (இன்ஸ்பெக்டர்) பிடிவாரண்ட் பிறப்பித்து திருவாரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
தற்போது திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவர் சிவவடிவேல் (50). இவர் 2014 -ஆம் வருடம் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக வேலை செய்தார்.
அப்போது, திருவாரூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற மணல் திருட்டு மற்றும் பணம் கையாடல் போன்ற வழக்குகளில் சிவவடிவேல் விசாரணை அதிகாரியாக பணியாற்றினார்.
இந்த வழக்குகளின் விசாரணை திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு சிவவடிவேலுக்கு, இரண்டு முறை அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், சிவவடிவேலு இரண்டு முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால், நீதிமன்றத்தை மதிக்காமல் இரண்டு முறையும் ஆஜராகாத சிவவடிவேலுக்கு திருவாரூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.