Tamil Rockers : தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது.! புதிய படங்களை எப்படி வீடியோ எடுத்தார் தெரியுமா.? வெளியான தகவல்

By Ajmal Khan  |  First Published Jul 28, 2024, 9:33 AM IST

புதிய படங்களை முதல் நாளிலேயே திருட்டு தனமாக வீடியோ எடுத்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட அட்மின்னை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ரகசிய கேமராவில் எப்படி வீடியோ எடுத்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
 


திரைப்படங்களின் திருட்டி வீடியோ

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு திருட்டு வீடியோ மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் கஷ்டப்பட்டு படம் எடுத்து திரைக்கு கொண்டு வந்தால் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் வெளியாகிவிடுகிறது. இந்த வீடியோவை சிடியாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

தற்போது உள்ள காலத்தில் பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலம் எளிதாக மொபைல் போனிலே ஓசியில் பார்த்து விடுகின்றனர். இதனால் திரையரங்கிற்கு கூட்டம் வராமல் பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். இதனால் பட தயாரிப்பாளர்கள் வீடியோ பைரசிக்கு எதிராக காவல்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வார்கள்.

இந்த ரயிலில் நீங்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.. எங்கு இருக்கு தெரியுமா?

ராயன் படத்தை திருட்டு வீடியோ

ஆனால் இந்த புகாரில் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் தான் மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் என்னும் இணையதள அட்மின்மை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய படங்கள் வெளியாகி ஒரு சில மணி நேரத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்படும். இதனால் பல தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு சைபர் கிரைம் போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்தாலும், புதிய, புதிய பெயர்களில் வீடியோக்களை வெளியிட்டு திரைத்துறைக்கு அதிர்ச்சியை கொடுப்பார்கள்.

இந்த நிலையில்  புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் ஸ்டீபன் ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் நடிகர் தனுஷ் நடித்த ராயன் படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது

இயக்குனர் மற்றும் நடிகர் பிருத்வி ராஜின் மனைவி கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதிய படங்களின் முதல் நாள் காட்சிகளிலேயே இருக்கையில் சிறிய கேமரா பொருத்தி வைத்து வீடியோ எடுப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக புதிய படங்களை முதல் நாளிலையே பதிவேற்றம் செய்த்தாக கூறியுள்ளார். மேலும் ஒரு படத்திற்கு 5ஆயிரம் ரூபாய் கமிஷன் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிவித்துளார். 

Mettur: சீறி பாய்ந்து வரும் 1.50லட்சம் கனஅடி நீர்.! கிடுகிடுவென உயரும் மேட்டூர்.!முழு கொள்ளளவை எப்போது எட்டும்
 

click me!