Chennai Beach Train : பராமரிப்பு காரணமாக நாளை சென்னையில் மின்சார ரயில் சேவை 12 மணிநேரம் நிறுத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை காலை 7:45 மணி முதல் இரவு 7:45 மணி வரை சென்னை பீச் மற்றும் எழும்பூர் இடையிலான புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது.
வெளியூர் செல்லும் ரயில்கள் ரத்து
சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி வரை செல்லக்கூடிய பல முக்கிய ரயில்கள் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து மீண்டும் அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும், சமஸ்கிருதத்துக்கும் என்னப்பா சம்பந்தம்? சீமான் ஆவேசம்
அதேபோல சென்னை எழும்பூரில் இருந்து தொடங்கி, திருச்சி மார்க்கமாக நீண்ட தூரம் செல்லும் ரயில்களும் திருச்சி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது தென்னக ரயில்வே அறிவித்துள்ள தகவலின்படி ஒரு சில சிறப்பு ரயில்களை தவிர சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் அனைத்து புறநகர் ரயில் சேவைகளும் நாளை காலை 7:45 மணி முதல் இரவு 7:45 மணி வரை ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை பெருவாரியான மக்கள், புறநகர் ரயில் சேவையை மட்டுமே தங்களுடைய அன்றாட பணிகளுக்காக நம்பி இருக்கின்றனர். வார நாட்களில் எப்போதும் வரும் புறநகர் ரயில்களே ஒரு சில நிமிடங்கள் தாமதமாக வந்தால், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதுவதை நம்மால் காண முடியும்.
இந்நிலையில் தொடர்ச்சியாக 12 மணி நேரம் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வரும் காரணத்தினால் அதிலும், புறநகர் பேருந்துகளிலும் பெரிய அளவிலான மக்கள் கூட்டங்கள் காணப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் நிலைமை சீரடையும் என்று தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது.
சாவர்க்கர் தொடர்பான கருத்து; உண்மை தன்மையை அறியாமல் பேசியது தவறு தான் சுதா கொங்குரா விளக்கம்