
கிண்டி ரேஸ்கோர்ஸில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆண் சடலம் ஒன்று வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கிண்டி அருகே உள்ள மடுவன்கரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் என்பது தெரியவந்தது.
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் தனியார் பாதுகாப்பு நிறுவன கண்காணிப்பில் இருக்கும் நிலையில், மோகன் ஆட்டோவுடன் உள்ளே சென்றுள்ளதாகவும், ஆட்டோ அருகிலேயே மோகன் கொலை செய்யப்பட்டுள்ளதால் ரோஸ்கோர்ஸ் மைதான பாதுகாவலர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சைதாப்பேட்டையை சேர்ந்த கார்த்திக், பிரபாகரன், சந்திரசேகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.