நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடி நீக்கம்...

Asianet News Tamil  
Published : Jul 11, 2017, 02:08 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடி நீக்கம்...

சுருக்கம்

Actor dilip removed from malayalam actors association

மலையாள முன்னணி நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி அவருடைய கார் ஓட்டுனரால் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகை மற்றும் இன்றி தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பாவனாவின் கார் ஓட்டுநர் அந்தோணி, பல்சர் சுனில் உட்பட 6  பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் .ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பாவனாவின் வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு உள்ளதாக ஆரம்பத்திலிருதே கூறப்பட்டு வந்த நிலையில், இதனை திலீப் தொடர்ந்து மறுத்து வந்தார், தீடீர் என பல்சர் சுனில் கொடுத்த  வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆளுவ சிறையில் அடைக்கப்பட்டார்.

பாவனா கடத்தி செல்லப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சதி திட்டம் தீட்டியதற்காக திலீப் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த சம்பவம் நடந்ததற்கு காரணம் பாவனா மீது திலீப் வைத்திருந்த தனிப்பட்ட பகை என தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதால், இன்று காலை தீடீர் என மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து அவர்களுக்குள் கலந்தாலோசித்தனர். இந்த கூட்டம் கொச்சியில் நடந்த அம்மா ஆலோசனை கூட்டத்தில் நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து விளக்குவதாக அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!