சுவாதி கொலை வழக்கு பட விவகாரம் - இயக்குநர், தயாரிப்பாளரை கைது செய்ய தடை....

First Published Jul 11, 2017, 1:41 PM IST
Highlights
ban to arrest the director producer of swathi murder film


சுவாதி கொலை வழக்கு திரைப்படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.கே. சுப்பையா கைது நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், ராம்குமார் சிறையில் இருந்த மின்வயரை கடித்து, தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜெயசுபஸ்ரீ புரடெக்‌ஷன் சார்பில் எஸ்.கே.சுப்பையா, ஸ்வாதி கொலை சம்பவத்தை திரைப்படமாக தயாரித்துள்ளார்.  எஸ்.பி.ரமேஷ்செல்வன் இந்த படத்தை இயக்கி உள்ளார். இப்படத்துக்கு 'ஸ்வாதி கொலை வழக்கு' என பெயரிடப்பட்டுள்ளது.

'ஸ்வாதி கொலை வழக்கு' படத்தில், ஸ்வாதி கொலை செய்யப்பட்டதில் இருந்து ராம்குமார் சிறையில் இறந்தது வரை நடந்த சம்பவங்களை எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனை சிறிதும் கலக்காமல் அப்படியே படமாக்குகிறோம் எனவும், இதற்காக, இதில் தொடர்புடைய நபர்கள், போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, விவரங்களை திரட்டி திரைக்கதை அமைத்து இருக்கிறோம் எனவும் இயக்குனர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், கடந்த மே மாதம் டிஜிபி அலுவலகத்தில் கடந்த புகார் அளித்திருந்தார். சந்தான கோபால கிருஷ்ணன் நேற்று, டிஜிபி அலுவலகம் வந்த அவர், சுவாதி கொலை வழக்கு படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மீண்டும் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு கைது நடவடிக்கை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான மனுக்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, அடுத்த விசாரணை வரும் வரையில் கைது நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

click me!