
நாகர்கோயிலில் புதிதாக கட்டப்பட்ட கோயிலில் இருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்கள் சிலர் பெயர்த்தெடுத்து கால்வாயில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோயில் பறக்கால்மடத்தில் புதிதாக விநாயகர் கோயில் ஒன்று கட்டப்பட்டது.
அதற்கான கும்பாபிஷேகம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில், தினமும் அந்த கோயிலில் உள்ள விநாயகர் சிலைக்கு பூஜை நடத்துவது வழக்கம்.
அதன்படி இன்று காலை பூஜைக்காக அப்பகுதி மக்கள் கோயிலுக்கு வந்தனர். அங்கு கோயிலின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கோயிலின் உள்ளே இருந்த விநாயகர் சிலை திருட்டு போயிருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிலையை அருகில் உள்ள கால்வாயில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கால்வாயில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்ட போது சிலை கிடைத்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிலையை கால்வாயில் வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.