
விவசாயிகளுக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு நன்றி தெரிவித்துள்ளார்.
திமுக சார்பாக சென்னையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்து கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய போராட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு, விவசாயிகள் நலனுக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
மேலும் கூட்டத்தில் பங்கேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாகவும் அய்யாககண்ணு குறிப்பிட்டார்.