புழல் சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் இயக்குநர் கவுதமன்

Asianet News Tamil  
Published : Apr 16, 2017, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
புழல் சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் இயக்குநர் கவுதமன்

சுருக்கம்

director gowthaman fasting protest vapas

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குநர் கவுதமன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். 

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் கவுதமன் கடந்த 13 ஆம் தேதி சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இயக்குநர் கவுதம் உள்ளிட்ட 7 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். 

ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கவுதமன் உள்ளிட்ட 7 பேரும், 15 நாள் நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் கவுதமன் உள்ளிட்ட அனைவரும்தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.

அங்கு வழங்கப்பட்ட உணவுகளை உண்ண மறுத்ததால், காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து  மூன்று தினங்களாக மேற்கொண்டு வந்த போராட்டத்தை கைவிடுவதாக கவுதமன் இன்று காலை அறிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!