
வங்கக்கடலில் மாருதா புயல் உருவாகி உள்ளதால் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நேற்று வரை நிலை கொண்டிருந்த குறைந்த காற்றுழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று நள்ளிரவு முதல் புயலாக மாறியுள்ளது.
இந்தப் புயல் மியான்மர் நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாருதா என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயலால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.