
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அனுமதி இல்லாமல் காளைவிடும் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை அறிந்த காவலாளர்கள் விழாவுக்கு தடை விதித்தும், விழாவுக்காக வைத்திருந்த மைக் செட்டுகள், ஒலிப் பெருக்கிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
உரிமை இல்லாமல் காளைவிடும் விழாவை நடத்த ஏற்பாடுகளை செய்ததை அறிந்த காவலாளர்கள் விழாவுக்கு தடை போட்டது மட்டுமின்றி விழாவை அலங்கரிக்க பயன்படுத்த பொருட்களை பறிமுதல் செய்ததால் இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், வாட்ஸ்-அப் மூலம் தகவல் பெறப்பட்டு காளைகளுடன் வந்த உரிமையாளர்கள் தங்களது காளைகளை திரும்ப அழைத்து செல்ல வேன்கள் இல்லாமல் பெரும் அவதி அடைந்தனர்.