மனைவி இறந்த சோகம்... காவலர் எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி!!

Published : Aug 16, 2022, 06:43 PM IST
மனைவி இறந்த சோகம்... காவலர் எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி!!

சுருக்கம்

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மனைவி இறந்த வேதனையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மனைவி இறந்த வேதனையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லுர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும் விஜய் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் முனியம்மாள் குடும்ப தகராறில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மகேஷ்வரன், இந்திரா காந்தி என்பவரை 2 ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு... நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்!!

இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த வருடம் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மகேஷ்வரன், இந்திரா காந்தியை அடித்துக் கொன்றார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவர் சமீபத்தில் பிணையில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி முதல் மனைவி முனியம்மாளின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. அப்போது, மகேஷ்வரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சவுளுர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மரத்தில் மகேஷ்வரன் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிங்க: காவிரி நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்கள்… விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்!!

இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் தனது மனைவி இந்திரா காந்தியின் இறப்புக்கு தானே காரணம் என்பதால், வாழ பிடிக்கவில்லை என்றும், இதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்