காவல் ஆணையர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரின் முரண்பட்ட கருத்துகளும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. பாஜக தலைவர் அண்ணாமலை, குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓயப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால் மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மாணவியின் பெயர், மொபைல் எண், வீட்டு முகவரி போன்றவை இடம் பெற்றிருந்தது.
undefined
அதேபோல் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் சார் என்று யாரிடமோ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் முரண்பட்ட கருத்துக்கள் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழக பாஜக இதனை விடப் போவதில்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமமுக முக்கிய பிரமுகர் விஜய் கட்சியில் இணைந்தார்! அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று ஊடகங்களில் பேசுகையில், முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். ஆனால், நேற்று ஊடகங்களைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று கூறுகிறார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது?
இதையும் படிங்க: சார் என யாரிடம் பேசினார் குற்றவாளி? FIR லீக்கானது எப்படி? சென்னை காவல் ஆணையர் அருண் பரபரப்பு தகவல்!
அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழக பாஜக இதனை விடப் போவதில்லை. பிரச்சினையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இருக்குமேயானால், திமுக அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அருண், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் முரண்பட்ட கருத்து என கூறியிருந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வந்த காவல்துறையினரிடம் அண்ணா பல்கலைக்கழகத்தின் (POSH - Prevention of Sexual Harrasment Committee) உள் விசாரணை குழுவினைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருந்தார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது.
உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று ஊடகங்களில் பேசுகையில், முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். ஆனால், நேற்று… pic.twitter.com/XjybJWhCol
இதையும் படிங்க: FIR வெளியான விவகாரம்! அண்ணாமலை எழுதிய ஒரே கடிதம்! தமிழகத்தை பார்த்து தேசிய மகளிர் ஆணையம் சொன்ன ஒற்றை வார்த்தை!
காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும் போதுதான் இந்த சம்பவம் தொடர்பாக POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு இந்த பிரச்சனை தெரியவந்துள்ளது. அதை வைத்துதான் POSH குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.