கோவையில் கோவில் அருகே மர்மமான முறையில் சிலிண்டர் வெடித்து விபத்து.. சென்னையில் கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவு.

By Thanalakshmi VFirst Published Oct 23, 2022, 5:16 PM IST
Highlights

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தையடுத்து, சென்னையில் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தீவிரமாக கண்காணிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
 

கோவை உக்கடம் அருகே சங்கமேஸ்வரர் கோவில் அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் கேஸ் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோயில் அருகில் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

பின்னர் சமபவ இடத்திற்கு விரைந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அங்கு ஆய்வு நடத்தினர். இது விபத்தா அல்லது அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழ்த்தும் நடவடிக்கையா என்ற கோணத்தில் தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:கோவையில் கோயில் அருகே வெடித்த கார்...! சதி செயல் காரணமா..? போலீசார் தீவிர விசாரணை

விபத்து நடந்த பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 200 மீட்டருக்கு மேலே இந்த சாலையில் யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.  காவல்துறை உயர் அதிகாரிகள், தடவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விபத்துக்குள்ளான பகுதியில் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  சிலிண்டர் வெடித்த விபத்தில் இறந்தது யார் என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. 

இந்நிலையில் சென்னையில் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தவும் தீவிரமாக கண்காணிக்கவும் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க:கோவையில் வெடித்தது யாருடைய கார்.? இறந்த மர்ம நபர் யார்..? சதியா..? விபத்தா..? திணறும் போலீஸ்...!

click me!