டிப்பர் லாரி உரிமையாளர் வெட்டி கொலை –  3 பேர் கைது…

 
Published : Jul 14, 2017, 09:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
டிப்பர் லாரி உரிமையாளர் வெட்டி கொலை –  3 பேர் கைது…

சுருக்கம்

Police arrested three people who killed and killed the owner of Tipper Lorry near Tanjore

தஞ்சை அருகே டிப்பர் லாரி உரிமையாளரை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
திருச்சி மாவட்டம் மாரனேரியை சேர்ந்தவர் பிரபு.  டிப்பர் லாரி உரிமையாளரான இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிவா, ராஜ்குமார், பிரகாசன் ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இன்று மதியம் திருச்சி தஞ்சை மாவட்ட எல்லையான கல்லணை கால்வாயில் தனது டிப்பர் லாரியில் மணல் ஏற்றி விட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் பிரபு வீடு திரும்பியுள்ளார். 
அப்போது எதிரே வந்த மூன்று பேர் கும்பல் பிரபுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். 
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருவெறும்பூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அங்கு வாகனத்தில் வந்த சிவா, ராஜ்குமார், பிரகாசன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பிரபுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர், போலீசார் அவர்கள் மூவரையும் கைது சிறையில் அடைத்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!