அரசு பேருந்து மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் உயிரிழப்பு...!!!

 
Published : Jul 14, 2017, 08:09 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
அரசு பேருந்து மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் உயிரிழப்பு...!!!

சுருக்கம்

7 people were killed in the accident when the government and the mini lorry collided with the help of Vallam near Thanjavur

தஞ்சாவூர் அருகே வல்லம் மேம்பாலத்தில் அரசு பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.

திருப்பூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தஞ்சாவூர் வல்லம் மேம்பாலம் அருகே வரும்போது திடீரென எதிர வந்த மினி லாரி அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.  

இதில் அரசு பேருந்தின் ஓட்டுனரும் மினி லாரியின் ஓட்டுனரும் சம்பவ இட்த்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் இதுவரை மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!