போலீசுக்கு கத்தி குத்து... ரவுடிக்கு துப்பாக்கிச்சூடு... தூத்துக்குடியில் பரபரப்பு..!

 
Published : Oct 09, 2017, 02:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
போலீசுக்கு கத்தி குத்து... ரவுடிக்கு துப்பாக்கிச்சூடு... தூத்துக்குடியில் பரபரப்பு..!

சுருக்கம்

police arrest rowdy in tutucorin

போலீசை கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் அத்திவீரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் ஒரு இடத்தில் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து உதவி ஆய்வாளர் ரென்னிஸ், தலைமைக் காவலர் முத்துராஜன் ஆகியோர், முத்துக்குமார் இருக்கும் இடத்திற்கு சென்றனர். போலீசாரைக் கண்ட ரவுடி முத்துக்குமார், தன்னிரமிருந்த கத்தியால் போலீசாரைக் கண்மூடித்தனமாக தாக்கினார்.

ரவுடியிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக ரவுடி முத்துக்குமாரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரவுடியை போலீசார் பிடித்து சென்ற பிறகும் அங்கு பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!