நேர்ல வந்து விளக்கம் கொடுங்க.. தேர்தல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

 
Published : Oct 09, 2017, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
நேர்ல வந்து விளக்கம் கொடுங்க.. தேர்தல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சுருக்கம்

high court order to state election commission

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடாதது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் வரும் 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது தொடர்பாக திமுக சார்பில் தொடரப்பட்ட மனுவை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான எந்தவிதமான அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் மாநில தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் வரும் 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டது. 

நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடாததற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!