
காஞ்சிபுரத்தில் பிரேம்குமார் என்பவரிடம் ரூ.5 லட்சத்தை வழிப்பறி செய்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 4.65 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் மிளகாய் மண்டி நடத்தி வருகிறார். இவர் காஞ்சிபுரம் பகுதியில் மிளகாய் மொத்த வியாபாரம் செய்து விட்டு அதற்கான பணத்தை வார இறுதியில் வந்து வசூல் செய்வது வழக்கம்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பகுதியில் பணத்தை வசூல் செய்ய வந்தார்.
பின்னர், வசூல் செய்த 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது சில 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிரேம்குமாரை தாக்கி விட்டு அவரிடம் இருந்து 5 லட்சம் பணத்தை வழிப்பறி செய்து கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த விஜய், கணேசன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 4.65 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.