திருநெல்வேலி குடிமகன்களின் தாகம் தீர்க்க உதவிய எம்.பி.!! விஜிலா மீது சுளீர் புகார்....

 
Published : Jun 25, 2017, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
திருநெல்வேலி குடிமகன்களின் தாகம் தீர்க்க உதவிய எம்.பி.!! விஜிலா மீது சுளீர் புகார்....

சுருக்கம்

Vijila Sathyananth MP give hier Property for tasmac

காந்தியும், கக்கனும், காமராஜரும்  வாழ்ந்த தேசத்தில் இப்படியும் சில அரசியல்வாதிகள் என்று தலையிலடிக்க வைக்கும் நபர்களின் லிஸ்டில் இணைந்திருக்கிறார் விஜிலா சத்யானந்த் எம்.பி. 
அப்படி என்ன செய்தார்?

திருநெல்வேலி சிட்டி அருகே வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலையில் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தை புதியதாக டாஸ்மாக் கடையினை திறக்க வாடகைக்கு கொடுத்துள்ளாராம். 

திருநெல்வேலி குடிமகன்களின் தாகம் தீர்க்க உதவிய எம்.பி.யை மனசார வாழ்த்துகிறது குடிகார ராக் குரூப்ஸ். 
விஜிலா சத்யானந்தின் இந்த காரியத்தை கன்னாபின்னாவென கலாய்த்துக் கொட்டியிருக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்...
“அய்யோ பாவம் விஜிலாக்காவும் என்ன செய்வார்?

திருநெல்வேலி மேயரெனும் பொதுநல பதவியில் இருந்து தனது கோடிக்கணக்கான சொத்துக்களை மக்களுக்காக வாரி இறைத்து ரோடுகளை போட்டு, பாலங்களை கட்டி, குளங்களை தூர்வாரி, ஏழை குழந்தைகளை படிக்க வைத்தார். 

அதன் பிறகு எம்.பி. பதவிக்கு சென்று தன் சொத்தில் மீதமிருந்ததை விற்று அரசு மருத்துவமனைகளுக்கு உதவி செய்து, ஆதரவற்ற இல்லங்களுக்கு அள்ளிக் கொடுத்து, நெல்லையில் பிளாட்பார வாசிகளை ஒழித்து எல்லோரையும் சந்தோஷமாக வாழ வைத்திருக்கிறார். 

நெல்லைக்காக தனது விட்டிலிருந்த கடைசி சொட்டு விதை நெல்லையும் விற்ற விஜிலா, அட்லீஸ்ட் ரெண்டு வேளை சோறாவது தானு தன் குடும்பமும் சாப்பிட வேண்டும் எனும் கவலையில் தன் குடும்ப நிலத்தை இப்படி டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். இது ஒரு தவறா? 

விஜிலா குடும்பத்தார் நிலத்தில் உருவாகும் சாராயக்கடையினால் தாலி அறுக்கும் பெண்களின் சாபங்களை, ஏற்கனவே அவர் நெல்லைக்கு செய்திருக்கும் கோடான கோடி புண்ணியம் செயலிழக்க வைத்துவிடும். 

அதனால் விஜிலாக்கா நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க தூரத்து சொந்தத்துல யாருக்காசும் நிலமிருந்தாலும் இப்படி இன்னொரு டாஸ்மாக்குக்கு வாடகைக்கு விடுங்க.” என்று வஞ்சக புகழ்ச்சியாய் வறுத்தெடுத்திருக்கிறார்கள். 

விஜிலா மீதான இந்த குற்றச்சாட்டு உண்மையா என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை. உண்மையிலேயே அவர் தனது குடும்ப நிலத்தை இப்படி டாஸ்மாக்குக்காக வாடகைக்கு விட்டிருந்தால் அது வெட்கக்கேடான விஷயமின்றி வேறேதுமில்லை. 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!