
ஜி.எஸ்டி வரி விதிப்பால் விலைவாசி உயராது என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து சென்னையில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த வரி விதிப்பு காரணமாக எந்த பொருளும் விலை உயராது என்று நிர்மலா சீத்தாராமன் கூறினார்.
வரி விதிப்பு குறித்து வியாபாரிகளுக்கு, உற்பத்தியாளர்களுக்கும், தொழில் செய்பவர்களுகளின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் நாடு ழுமுவதும் முயற்சி நடந்து வருகிறது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து அனைவரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து வருகிறோம். ஜி.எஸ்.டி. தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மாவட்ட தலைநகரங்களில் ஜி.எஸ்.டி. குறித்து கருத்தரங்கு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பிராண்ட் பெயர் இல்லாமல் விற்பனை செய்யும் பொருட்களுக்கு வரி கிடையாது என்றும், ஜி.எஸ்.டி. வரி குறித்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு விளக்கம் தரப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சமூக வலைத்தளங்களிலும் ஜி.எஸ்.டி. குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு வருகின்றன. வணிகர்களுக்கு மத்திய அரசின் அதிகாரிகள் பதில் அளிப்பார்கள் என்றார்.