பாக்கெட் சாராயம் மூலம் கள்ளக்குறிச்சி பள்ளிக்கு தீ வைக்கப்பட்டதா...? திடீரென வெளியான விடியோவால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Jul 20, 2022, 9:11 AM IST
Highlights

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாக்கெட் சாராயம் கொண்டு, தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது
பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் பஸ் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

தனியார் பள்ளிக்கு தீ வைப்பு

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார்  பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஶ்ரீமதி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13 ஆம் தேதி பள்ளி விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திடீரென ஏற்பட்ட வன்முறையால் தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளியில் நிறுத்திவைக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பேருந்துகளும் கார்களும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. மேலும் பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜைகள், நாற்காலிகளுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதே போல அந்த பள்ளியில் படிக்கும் சுமார் 4ஆயிரம் மாணவர்களின் டிசிகளும் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

கள்ளக்குறிச்சி கலவரம் வழக்கு.. 4 பேர் காவல்நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக தகவல்..!

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைப்பு.. தமிழக அரசு அதிரடி முடிவு !

சாராய பாக்கெட் மூலம் தீ வைக்கப்பட்டதா?

இந்தநிலையில் தனியார் பள்ளிக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடத்திற்கு எப்படி தீ வைக்கப்பட்டது. வன்முறையாளர்களுக்கு தீவைக்கும் அளவிற்கு எப்படி பொருட்கள் கிடைத்தது என ஆராயப்பட்டது. இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் 100க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்களை பேருந்துகள் மற்றும் பள்ளி அலுவலகத்தில் தூக்கி வீசி அதன் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இருந்த போதும் அந்த வீடியோ உண்மையானதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்ற்னர். மேலும் அந்த பகுதியில் எப்படி சாராய பாக்கெட் கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தியுள்ளனர். 

இதையும் படியுங்கள்

அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு...? நீதிமன்றத்தில் இன்று உத்தரவு.. காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்..!

 

click me!