இல்லம் தேடி கல்வி திட்ட ஊழியர்களுக்கு 4 மாத சம்பளம் பாக்கி..! தமிழக அரசை போட்டு தாக்கும் ராமதாஸ்..

Published : Jun 05, 2022, 12:38 PM ISTUpdated : Jun 05, 2022, 12:41 PM IST
 இல்லம் தேடி கல்வி திட்ட ஊழியர்களுக்கு 4 மாத சம்பளம் பாக்கி..! தமிழக அரசை போட்டு தாக்கும் ராமதாஸ்..

சுருக்கம்

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்..  

இல்லம் தேடி கல்வி- சம்பளம் பாக்கி

கொரோனா காரணமாக இரண்டு  ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவரின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு தமிழக முதல்வர் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.  பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இத்திட்டத்தின்கீழ், மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக தன்னார்வலர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு முனைவர் பட்டம் முடித்த 450 பேர் உட்பட மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து  பணியாற்றி வந்தவனர். இவர்களுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்க வில்லையென்று புகார் எழுந்தது.

தன்னார்வலர்கள் பாதிப்பு

இந்தநிலையில் இந்த புகார் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட பாமக நிறுனவர் ராமதாஸ், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் கற்பித்தல் தன்னார்வலர்களாக பணியாற்றி வரும்  ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.1000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்! இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. வேறு வேலை செய்யாத  பலருக்கு அது தான் வாழ்வாதாரம்.  அதையும் குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது நியாயமல்ல!  இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் செய்வது சேவை ஆகும். அவர்களில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது.  அவர்களுக்கு  உடனடியாக ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஒரு வருட திமுக ஆட்சி 10க்கு எத்தனை மதிப்பெண்..! ஸ்டாலின் ஆட்சி வீழ்ச்சியா? வளர்ச்சியா? கருத்து கணிப்பு முடிவு
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்