ஒரு வருட திமுக ஆட்சி 10க்கு எத்தனை மதிப்பெண்..! ஸ்டாலின் ஆட்சி வீழ்ச்சியா? வளர்ச்சியா? கருத்து கணிப்பு முடிவு

By Ajmal KhanFirst Published Jun 5, 2022, 11:57 AM IST
Highlights

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், ஸ்டாலின் ஆட்சிக்கு 10க்கு 6 மதிப்பெண்களுக்கு மேல் 59 சதவிகித மக்கள் கொடுத்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

முதலாம் ஆண்டில் திமுக ஆட்சி

2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்த திமுக அடுத்த சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்வியையே சந்தித்தது, இதன் காரணமாக திமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் திமுக கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. இதனையடுத்து 10 ஆண்டுகள் காத்திருப்புக்கு பலனாக சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது. திமுக ஆட்சியை பிடிப்பதற்கு முன் பல வாக்குறுதிகளை மக்களிடம் கூறியது. இதனால் திமுக மீது நம்பிக்கை வைத்த மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தனர். இந்தநிலையில் திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதா? அல்லது சரிந்துவிட்டதாக என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இதற்க்கு பதில் கிடைக்கும் வகையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.

வாக்குறுதியை திமுக நிறைவேற்றியதா?

இந்த கருத்து கணிப்பில் பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் விடை அளித்துள்ளனர். அதில் தேர்தல் வாக்ககுறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா என்ற கேள்விக்கு முழுமையாக ஏற்பதாக 25.30%, ஓரளவு ஏற்கிறேன் 33.35% பேரும் கூறியுள்ளனர். கொரோனா பேரிடரை திமுக அரசு எப்படி கையாண்டது என்ற கேள்விக்கு 46.22% சதவிகித மக்கள் சிறப்பாக கையாண்டதாகவும், மேலும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என 28.54 % மக்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டதாக 14.49 % மக்கள் கூறியுள்ளனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பலம் என்ன என்ற கேள்விக்கு மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என 34.88% பேரும், கொரோனா நிவாரணம் 12.75% பேரும், நகை கடன் தள்ளுபடி 11.90 % பேரும் மிகப்பெரிய ஊழல் புகார் இல்லாமல் இருப்பது என 6.56% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

திமுகவிற்கு 10க்கு எத்தனை மதிப்பெண் ?

மேலும் அதிமுக எதிர்கட்சியாக சிறப்பாக செய்லபடுகிறதா? என்ற கேள்விக்கு மிகச்சிறப்பாகென 15.36%, சிறப்பாக என     19.51 %, நிறைவாக 16.15% ஆதரவாக தெரிவித்துள்ளன்னர். ஆனால் அதே நேரத்தில் சிறப்பாக செயல்படவில்லையென 38.03 % பேர் கருத்து கூறியுள்ளனர். தமிழகத்தில் உள்ள முதல் 3 தலைவர்களை வரிசைப்படுத்துக என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 49.10% பேரும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு 16.69 % நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 13.49 % பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். கடைசியாக ஓராண்டில் திமுக ஆட்சியின் மதிப்பெண் என்ற கேள்விக்கு 1 முதல் 5 வரை என 37.43% பேரும், 6 முதல் 10 வரை என 59.03% என கருத்து தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

இளம்பெண்ணுடன் கணபதி சில்க்ஸ் உரிமையாளரின் மகன் உல்லாசம்...? பணம் கொடுத்து பேரம் பேசுவதாக பெண் கதறல்


 

click me!