Vikram Movie : கோவில்பட்டியில் நடிகர் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் ஆடியோ இல்லமால் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் திரையரங்கு நிர்வாகிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விக்ரம்
இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கமலின் விக்ரம் நேற்று வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தமிழகமெங்கும் அதிகாலை 4 மணிக்கான சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றும் நாளையும் சிறப்பு காட்சிகளை வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வசூல் தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் படத்தில் பட ட்விஸ்டுகள், டேட்டாக்கள், எமோஷன், சென்டிமென்ட் என அத்தனையையும், மிக நேர்த்தியாக கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது விக்ரம் திரைப்படம். கோவில்பட்டியில் 3 திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இதில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் எதிரே உள்ள திரையரங்கில் விக்ரம் திரைப்படம் வெளியாகி உள்ளது. நேற்று காலை 11 மணி காட்சி ஓடிக் கொண்டு இருக்கும் போது, இடைவேளைக்கு பின்னர் திரையில் ஆடியோ இல்லமால் காட்சி மட்டும் ஓடியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகிகளிடம் வாதத்தில் ஈடுபட்டனர்.
திரையரங்கில் தகராறு
மேலும் டிக்கெட் பணத்தினை திரும்ப தரும்படி கேட்டு உள்ளனர். ஆனால் திரையரங்கு நிர்வாகம் முழுமையான பணம் தரமுடியாது பாதி பணம் தான் தரமுடியும், இல்லையென்றால் ஆடியோ சரியாகும் வரை காத்திருந்து படத்தினை பார்த்து செல்லுங்கள் என்று கூறியதால் வாக்குவாதம் முற்றியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திரையரங்கு நிர்வாகத்தினர் மற்றும் ரசிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், பணத்தினை திரும்ப தர நடவடிக்கை எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அடுத்த காட்சி ஆடியோ சரிசெய்யப்பட்டு ஒளிபரப்பாகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பெண்கள் ஹாஸ்டலில் ரகசிய கேமரா..1,000க்கும் மேற்பட்ட வீடியோஸ்.. சிக்கிய ஹார்ட் டிஸ்க்.! போலீஸ் ஷாக் !
இதையும் படிங்க :AIADMK : அமமுக முக்கிய புள்ளிகள் அதிமுகவுக்கு தாவினர்..டிடிவி தினகரன் அதிர்ச்சி !