சம்பளமோ 5% கூட உயரல, சமையல் எரிவாயு விலையோ 58% உயர்வு - ராமதாஸ் கண்டனம்

By Velmurugan s  |  First Published Mar 2, 2023, 7:43 PM IST

பொதுமக்களின் வருவோயோ 5 விழுக்காடு கூட உயராத நிலையில் கடந்த 20 மாதங்களில் சமையல் எரிவாயு உருளைகளின் விலையோ 58 விழுக்காடு உயர்ந்துள்ளதாகக் கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பொதுமக்களின் வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய சமையல் எரிவாயு உருளைகளின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் ஓர் உருளையின் விலை ரூ.1118.50 ஆக உயர்ந்திருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாத விலை. இது  அவர்களின் மாதச் செலவுகளை கடுமையாக பாதிக்கும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.710 ஆக இருந்தது. கடந்த 20 மாதங்களில்  ரூ.408,  அதாவது 58% உயர்ந்திருக்கிறது. மக்களின் வருவாய் 5% கூட உயராத நிலையில், சமையல் எரிவாயு விலையை 58% உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

Tap to resize

Latest Videos

ஈரோடு கிழக்கு தொகுதி; டெபாசிட் தொகையை தக்கவைத்த அதிமுக

சமையல் எரிவாயு விலை கடைசியாக கடந்த ஜூலை மாதத்தில் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் உலகச் சந்தையில் எரிவாயு விலை சரிந்திருக்கிறது.  இந்தியாவிலும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விலை குறைக்கப்பட்டது. வீட்டுப்பயன்பாட்டுக்கான எரிவாயு விலையை குறைப்பதற்கு பதிலாக உயர்த்துவது நியாயமா?

பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை முயற்சி: கள்ளக் காதலி உள்பட 2 பேர் கைது

சமையல் எரிவாயு விலை ரூ.1000-க்கும் மேல் இருக்கக் கூடாது. எனவே, சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, சமையல் எரிவாயு உருளைகளுக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!