PM Narendra Modi Rail and Road Projects in Tamilnadu : ஏப்ரல் 6ஆம் தேதி நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்த பின்னர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
PM Narendra Modi Rail and Road Projects in Tamilnadu :பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். ராம் நவமி அன்று, இந்தியாவின் முதல் செங்குத்து கடல் பாலம் பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். அதை ஒட்டியுள்ள சாலை பாலத்தில் இருந்து ரயில் மற்றும் கப்பலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் பாலத்தின் செயல்பாட்டு விளக்கத்தையும் பார்வையிடுகிறார்.அதன் பிறகு, பகல் 12:45 மணியளவில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்து பூஜை செய்கிறார். ராமேஸ்வரத்தில் சுமார் 1:30 மணியளவில், தமிழகத்தில் ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷண பதக்கம் வழங்கிய இலங்கை அரசு!
அவர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
இந்த திட்டங்களில், NH-40 நெடுஞ்சாலையின் 28 கி.மீ., நீளமுள்ள வாலாஜாபேட்டை - ராணிப்பேட்டை பகுதியை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். NH-332 நெடுஞ்சாலையின் 29 கி.மீ., நீளமுள்ள விழுப்புரம் - புதுச்சேரி பகுதியை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தையும், NH-32 நெடுஞ்சாலையின் 57 கி.மீ., நீளமுள்ள பூண்டியாங்குப்பம் - சாத்தனாதபுரம் பகுதியை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தையும், NH-36 நெடுஞ்சாலையின் 48 கி.மீ., நீளமுள்ள சோழபுரம் - தஞ்சாவூர் பகுதியை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நெடுஞ்சாலைகள் பல யாத்திரை தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்களை இணைக்கும். நகரங்களுக்கு இடையேயான தூரத்தை குறைக்கும். மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் துறைமுகங்களுக்கு விரைவான அணுகலை வழங்கும். மேலும் உள்ளூர் விவசாயிகள் விவசாய பொருட்களை அருகிலுள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்லவும், தோல் மற்றும் சிறு தொழில்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் உதவும்.
டூர் டிக்கெட் ரேட் கம்மி.. நேபாளத்தை குறைந்த விலையில் சுற்றிப் பார்க்க ஒரு சான்ஸ்!
புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்து ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) புதிய ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த பாலம் ஆழ்ந்த கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ராமாயணத்தின் படி, ராமர் சேது கட்டுமானம் ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள தனுஷ்கோடியில் இருந்து தொடங்கப்பட்டது.
ராமேஸ்வரத்தை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இந்த பாலம், உலக அரங்கில் இந்திய பொறியியலின் குறிப்பிடத்தக்க சாதனையாக நிற்கிறது. இது ரூ.700 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ளது. இது 2.08 கி.மீ., நீளம் கொண்டது. 99 தூண்களையும், 72.5 மீட்டர் செங்குத்து தூக்கும் வசதியையும் கொண்டுள்ளது. இது 17 மீட்டர் உயரம் வரை உயர்ந்து கப்பல்களின் சீரான இயக்கத்தை எளிதாக்குகிறது. அதே நேரத்தில் தடையற்ற ரயில் செயல்பாடுகளையும் உறுதி செய்கிறது.
இனி ரயிலில் UnReserve டிக்கெட் வச்சே SLEEPR கோச்ல போகலாம்! இந்த ட்ரிக் தெரிஞ்சா போதும்
துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல், உயர்தர பாதுகாப்பு வண்ணப்பூச்சு மற்றும் முழுமையாக வெல்டிங் செய்யப்பட்ட மூட்டுகள் மூலம் கட்டப்பட்ட இந்த பாலம் அதிகரித்த ஆயுள் மற்றும் குறைந்த பராமரிப்பு தேவைகளை கொண்டுள்ளது. எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இரட்டை ரயில் பாதைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு பாலிசிலாக்சேன் பூச்சு அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. கடுமையான கடல் சூழலில் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.