பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியின் முழுமையான பயணத்திட்டத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
PM Modi will inaugurate new Pamban Bridge tomorrow: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டதால் கடந்த 2020ம் ஆண்டு முதல் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. கடல் காற்று மற்றும் சவாலான வானிலைக்கு மத்தியில் பாம்பன் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்தன.
பாம்பன் பாலத்தை திறக்கும் மோடி
இதன்பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டபின் பம்பன் புதிய பாலத்தில் ரயில்களை இயக்கி சோதனை நடத்தப்பட்டன. பாம்பன் புதிய பாலத்தில் 72.5 மீட்டர் நீளமுள்ள மையப் பகுதி உள்ளது. இதன் மூலம் கப்பல்கள் செல்வதற்காக 17 மீட்டர் உயரத்திற்கு பாலத்தை உயர்த்த முடியும்.புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 6) நேரில் திறந்து வைக்க உள்ளார்.
பிரதமர் மோடியின் பயண விவரங்கள்
இந்நிலையில், பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் பயண திட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன. அதாவது இப்போது இலங்கையில் உள்ள பிரதமர் மோடி அங்கு இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ராமேஸ்வரம் மண்டபத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஹெலிபேட் தளத்திற்கு நாளை காலை 11.45 மணிக்கு வந்திறங்குகிறார்.
இந்தியாவிலேயே நம்பர் 1; தமிழ்நாடு பொருளாதாரம் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சம்!
ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம்
இதனை தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக பாம்பன் சாலை பாலத்தின் நடுவே உள்ள மேடைக்கு சென்றடையும் பிரதமர் மோடி நண்பகல் 12 மணி அளவில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். பின்பு விழா முடிந்து மதியம் 12.40 மணி அளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி 1.15 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
இதன்பின்னர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடக்கும் நிகழ்ச்சிக்கு 1.30 மணிக்கு செல்லும் பிரதமர், 2.30 மணி வரை பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மக்கள் மத்தியில் உரையாற்றுகிறர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு சாலை மார்க்கமாக மீண்டும் மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு செல்லும் மோடி ராணுவ ஹெலிகாப்டரில் 3.00 மணிக்கு மதுரை செல்கிறார். தொடர்ந்து மதியம் 3.50 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் டெல்லி செல்ல இருக்கிறார்.
தமிழகத்தில் இன்று இந்த 7 மாவட்டங்களில் ஏழரையை கூட்டப்போகுதாம் மழை! அலறவிடும் வானிலை மையம்!