குறி வைக்கும் பாஜக.. தமிழகத்தில் மீண்டும் களம் இறங்கும் மோடி.. எங்கெல்லாம் செல்கிறார்.?பயண திட்டம் என்ன?

By Ajmal KhanFirst Published Apr 15, 2024, 8:44 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். இன்று மாலை நெல்லைக்கு வரும் மோடி பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார். 
 

மீண்டும் தமிழகத்தில் மோடி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அதிகாலையில் தொடங்கும் பிரச்சாரம் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக கால் பதிக்க வேண்டும் என முயற்சியோடு பாஜக தீவிரமாக களம் இறங்கியுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் தமிழக பயணம் தொடர்ந்து கொண்டே உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 7 முறை தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே 3 முறை தமிழகம் வந்துள்ளார். இந்தநிலையில்  8வது முறையாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கவுள்ளார்.

பாஜக தேர்தல் அறிக்கை

பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் அமல், மருந்தகங்களில் முதியோர்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள், ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின், புதிதாக வீடுகள் கட்ட அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று தமிழகத்தில் மீண்டும் மோடி பிரச்சாரம் செய்யவுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4:10 மணிக்கு அகஸ்தியர்பட்டிக்கு வரவுள்ளார். மாலை 4:20 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறும் கூட்டத்தில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். 

மோடி பயணதிட்டம் என்ன.?

அப்போது  திருநெல்வேலி வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தென்காசி ஜான்பாண்டியன் மற்றும் தூத்துக்குடி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அதிமுகவை தோளில் சுமந்தது போதும்.. ஆட்சியைக் கொடுத்தது போதும்.. வெறுப்பில் இருக்கிறோம்- சீறும் அன்புமணி

click me!