PM Modi in Coimbatore : மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தொடர்ச்சியாக மக்களை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் நடந்த ரோட் ஷோவில் பங்கேற்றார்.
மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி முடிய உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தங்களுடைய பணிகளை துவங்கியுள்ளனர். குறிப்பாக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் விரைவில் மக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் கோவையில் நடைபெற்ற ரோடு ஷோ ஒன்றில் பங்கேற்க பிரதமர் மோடி அவர்கள், இன்று தமிழகம் வருகை தந்திருந்தார். மாலை சுமார் ஆறு மணிக்கு துவங்கிய இந்த ரோடு ஷோ, மாலை 7.30 மணி வரை நீடித்தது. வழிநெடுங்க பிரதமருக்காக மக்கள் கடல் அலையென காத்திருந்தனர். மக்களை அனைவருக்கும் கையசைத்து வாழ்த்து கூறினார் மோடி.
பாமக பாஜகவுடன் கூட்டணி! இன்று இரவு ராமதாஸ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்
இறுதியாக கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பாக போட்டியிடப் போவது யார் யார்? என்கின்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்தியாவின் தென் பகுதியிலும் வேரூன்றி நிற்க பாஜக எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தமிழக மாநில பாஜக தலைவர் நடத்திய என் மண் என் மக்கள் என்ற யாத்திரையின் நிறைவு விழாவில் பல்லடத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.
தீவிரமான மக்கள் பணிக்கு திரும்பவே ஆளுநர் பதவியை ராஜானாமா செய்தேன் - தமிழிசை சௌந்தரராஜன்