தேசிய கீதத்துடன் இனிதே துவங்கியது "கேலோ இந்தியா" - பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

By Ansgar R  |  First Published Jan 19, 2024, 6:26 PM IST

Khelo India Youth Games : தமிழக அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கியுள்ளது.


மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்பொழுது சென்னையில் நடைபெறும் "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். 

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 11 நாட்கள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு சட்டக்கல்லூரி மாணவன் பலி; சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

இந்த போட்டியில் சுமார் 36 மாநிலங்களைச் சேர்ந்த 5500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக இந்த கேலோ இந்தியா போட்டிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பங்கேற்க இன்று மாலை 4 மணியளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட திரு நரேந்திர மோடி அவர்கள், சுமார் 4 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் கே என் நேரு, துரைமுருகன் ஆகியோர் அவரை வரவேற்றனர். 

நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்பொழுது இந்த கோலாகல விழா நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் பிரதமர் மோடி அவர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுக்கு படிக்க பணம் தேவைப்பட்டதால் வேலைக்கு சென்ற பெண்ணை கொடுமை படுத்தியுள்ளனர் - எவிடென்ஸ் கதிர் ஆதங்

click me!