கவனத்திற்கு!! பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்..

By Thanalakshmi VFirst Published May 22, 2022, 9:57 AM IST
Highlights

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 23 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளன.
 

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இந்த முறை நடைபெறுகிறது. சென்ற முறை மற்றும் அதற்கு முந்தைய முறையும் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 10 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த மாதம் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 26,76, 675 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.  அதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த, 7,534 பள்ளிகளைச் சேர்ந்த, 8.85 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில், 32 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் பிளஸ் 2வில் கணிதம், கணினி அறிவியல், பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு, முக்கிய பாடத் தேர்வுகள் நேற்று முன்தினம் முடிந்து விட்டன. அறிவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் நாளை முடிகின்றன.உயிரியல், அறிவியல், வணிக கணிதம், தொழிற்கல்வி பிரிவு பாடங்களுக்கு, நாளை இறுதி தேர்வுகள் நடக்கின்றன.

இதனுடன் அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.இதையடுத்து, கூடுதல் பாடமாக தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மட்டும் 28ம் தேதி தொழிற்கல்வி பாடத் தேர்வு நடக்கிறது. இதை தொடர்ந்து, ஜூன் 1 முதல் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் துவங்க உள்ளன.ஜூன் 23ல் தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அப்டேட்.. விடைத்தாள் திருத்தம் எப்போது..? தேதி அறிவிப்பு..

click me!