
தேனி மாவட்டம், தேனி காவல் நிலையம் எதிரேவுள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (45). இவர் கரும்புச்சாறு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் வசந்தி (17). தேனியில் உள்ள பள்ளி ஒன்றில் பதினோறாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள அறையில் வசந்தி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இரவு சாப்பிடுவதற்காக மாடிக்கு சென்ற தந்தை மணிகண்டன் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
பின்னர், இதுகுறித்து காவல்துறைக்கு கிடைத்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வசந்தியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்த விசாரணையைத் தொடர்ந்தனர்.
அதன்படி காவலாளர்கள் கூறியது: "மாணவி வசந்திக்கு படிப்பு சரியாக வரவில்லை என்பதால் பள்ளிக்குப் போக விருப்பமில்லை என்று தந்தையிடம் பலமுறை கூறியுள்ளர். அவளைச் சமதானப்படுத்தி தந்தையும், தாயும் பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளனர். இந்த நிலையில் வசந்தி மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்" என்று தெரிவித்தனர்.
படிப்பு வராததால் பள்ளிக்குப் போக விருப்பம் இல்லாததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.