பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.. வரும் 27 ல் வெளியீடு.. முழு தகவல்.

By Thanalakshmi VFirst Published Jun 25, 2022, 11:07 AM IST
Highlights

வரும் ஜூன் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
 

மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20 ஆம் தேதி வெளியாகின. இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் 93.76 சதவீதமும்  , 10 ஆம் வகுப்பில் 90.07 சதவீதமும் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை அடுத்து 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது. ஆன்லைன் மூலமாக www.tngasa.in என்கிற இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதே போல் ஜூலை 19 ஆம் தேதி வரை இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பத்தை மாணவர்கள் http:/www.tneaonline.org என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.  மாணவர்கள் சொந்தமாகவோ அல்லது பள்ளிகள், அரசின் இலவச மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க:சென்னை வாகன ஓட்டிகள் முக்கிய அறிவிப்பு.. இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்..!

மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் வரும் 27ம் தேதி முதல் ஜூலை 4 வரை, துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.  பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, ஜூலை 25 முதல் ஆக.,1 வரையிலும்; பிளஸ் 1க்கு ஆக., 2 முதல் 10 வரையிலும்; 10ம் வகுப்புக்கு ஆக.,2 முதல் 8 ஆம் தேதி வரையிலும் துணை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில் வரும் வரும் ஜூன் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 8.83 லட்சம் மாணவர்கள் எழுதினர். மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவு எண், பிறந்த தேதி குறிப்பிட்டு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். ஜூலை 7 ஆம் தேதி தேர்வு முடிகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

மேலும் படிக்க:ராமேஸ்வரம் கோவிலில் ஆளுநர் RN.ரவி குடும்பத்துடன் தரிசனம்.. அடுத்து நேராக எங்கு சென்றார் தெரியுமா?

click me!