ராமேஸ்வரம் கோவிலில் ஆளுநர் RN.ரவி குடும்பத்துடன் தரிசனம்.. அடுத்து நேராக எங்கு சென்றார் தெரியுமா?

Published : Jun 25, 2022, 10:52 AM ISTUpdated : Jun 25, 2022, 11:43 AM IST
ராமேஸ்வரம் கோவிலில் ஆளுநர் RN.ரவி குடும்பத்துடன் தரிசனம்.. அடுத்து நேராக எங்கு சென்றார் தெரியுமா?

சுருக்கம்

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் மதுரை வந்து சாலை மார்கமாக நேற்று தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் வந்தார். 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் அவரது மனைவியும் சுவாமி தரிசனம் செய்தார். 

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் மதுரை வந்து சாலை மார்கமாக நேற்று தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் வந்தார். அவரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்டு ராமநாத சுவாமி சன்னதியில் ஸ்படிக லிங்க தரிசனம் செய்ய வந்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை  அளிக்கப்பட்டது. பின்னர்,  பொது தரிசனத்தில் தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் சாமி தரிசனம் செய்தார்.

இதனையடுத்துது, தனுஷ்கோடி சென்று பார்வையிட்டார். இதன் பின்னர், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். மேலும், அப்துல்கலாமின் தேசிய நினைவிடம் சென்று அஞ்சலி  செலுத்தினார்.

இதையும் படிங்க;- பொதுக்குழுவில் நடந்த அநாகரிக செயல்.. டிவி பார்த்த படியே மாரடைப்பால் உயிரிழந்த நிர்வாகி.. அதிர்ச்சியில் OPS

PREV
click me!

Recommended Stories

அடிதூள்.. ஜனவரி 2ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கு விடுமுறை.. என்ன காரணம்?
அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி