ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற போது பயங்கர விபத்து.. ஓட்டுநர் பலி.. 23 பேர் படுகாயம்..!

By vinoth kumarFirst Published May 16, 2022, 1:15 PM IST
Highlights

தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் ராமேஸ்வரம் கோவிலுக்கு வேனில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, வேன் உச்சிப்புளி அருகே சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. 

ராமநாதபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 23 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் ராமேஸ்வரம் கோவிலுக்கு வேனில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, வேன் உச்சிப்புளி அருகே சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், பனை மரத்தில் வேன் மோதியது. இதில், வேன் ஓட்டுநர் நவநீதன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். வேனில் பயணித்த 23 பேர் படுகாயமடைந்து வலியால் கதறி துடித்தனர். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ஓட்டுநரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்தனர். இதுகுறித்து உச்சிப்புளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!