நாய் மீது மோதாமல் இருக்க காரை திரும்பிய போது பயங்கரம்.. துடிதுடித்து உயிரிழந்த மருத்துவ மாணவர்..மாணவி படுகாயம்

By vinoth kumar  |  First Published Apr 13, 2022, 3:30 PM IST

திருச்சியை சேர்ந்த சீனிவாசன், சிவகங்கை மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் அஜித் மீத்துலேஷ் (22). இவர் இதே மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இதுபோல் சிவகங்கையை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி(20) என்ற மாணவியும் அங்கு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. 


ராமநாதபுரம் அருகே சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியதில் கட்டுப்பாட்டை  இழந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத்துவ மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

கார் விபத்து

Tap to resize

Latest Videos

undefined

திருச்சியை சேர்ந்த சீனிவாசன், சிவகங்கை மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் அஜித் மீத்துலேஷ் (22). இவர் இதே மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இதுபோல் சிவகங்கையை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி(20) என்ற மாணவியும் அங்கு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று காலை இவர்கள் ஒரு காரில் ராமநாதபுரம் மாவட்டம் அதியமான் கடற்கரைக்கு சுற்றுலா சென்று விட்டு திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

 மருத்துவ மாணவர் பலி

ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவேரியார்பட்டினம் விலக்கு அருகே வந்தபோது நாய் மீது மோதாமல் இருக்க  அஜித் மீத்துலேஷ் காரை திருப்ப முயன்றதில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதில் அஜித் மீத்துலேஷ் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

போலீஸ் விசாரணை

மேலும் விபத்தில் படுகாயமடைந்த மாணவி ஐஸ்வர்யா லட்சுமி ராமநாதபுரம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!