ராமேஸ்வரத்தில் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.. அதிர்ச்சியில் பக்தர்கள்.!

By vinoth kumar  |  First Published May 15, 2022, 11:12 AM IST

உலகப் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலம் இந்தியாவில் தமிழகத்தில் தெற்கோடியில் ராமேஸ்வரம் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராமாயணம் வரலாற்று தொடர்புடையது. 


ராமேஸ்வரத்தில் 50 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கிய சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகப் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலம் இந்தியாவில் தமிழகத்தில் தெற்கோடியில் ராமேஸ்வரம் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராமாயணம் வரலாற்று தொடர்புடையது. இலங்கையை ஆண்டு வந்த ராவணன் இந்தியாவிலிருந்து ராமர் மனைவி சீதையை கடத்திச் சென்றார். இலங்கைக்கு கடத்தி சென்று தன் மனைவியை ராமர் மீட்டு வரும்போது ராமேஸ்வரத்தில் அவர் பாதம் பட்டதாலும், ராமர் சீதையுடன் சிறப்பு பூஜை செய்ததால் புண்ணிய தலமாக பக்தர்கள் கருதுகின்றனர்.

Latest Videos

undefined

இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் உள்பட உலக நாடுகளிலிருந்து ராமர் பாதம் பட்ட ராமேஸ்வரம் கோவிலில் அமைந்துள்ள ஜோதி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இங்கு வருகை தரும் பக்தர்கள் காசிக்கு நிகராக கருதப்படும் புண்ணிய தீர்த்தமான அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது குடும்ப கஷ்டங்களை கழித்து நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஐதீகமாக கருதுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் கோவிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் ஒவ்வொரு தீர்த்தமும் பயன் பாட்டின் தன்மை உள்ளது. இதனால் அக்னி தீர்த்த கடலில் நீராடி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி பின்னர் சிவனை வழிபடுவதை மிகவும் ஐதீகமாக கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தின் நலனுக்காகவும், வாரிசுகளின் நலனுக்காகவும் முன்னோர்களின் நினைவுக்காகவும் ராமேசுவரம் புண்ணிய தலமான அக்னி தீர்த்த கடலில் சிறப்பு பூஜைகள் செய்வதை மிகவும் ஐதீகமாக கருதுகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதியில் புனித நீராடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகள் தெரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!