கிரிக்கெட் பந்து ரூபத்தில் வந்த எமன்.. நெஞ்சில் பட்டதுமே சுருண்டு விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சிறுவன்..!

Published : May 30, 2022, 12:04 PM IST
கிரிக்கெட் பந்து ரூபத்தில் வந்த எமன்.. நெஞ்சில் பட்டதுமே சுருண்டு விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சிறுவன்..!

சுருக்கம்

பீல்டிங்கில் நின்று கொண்டிருந்த போது மற்றொருவர் அடித்த பந்து அவரது நெஞ்சில் வலது புறம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சுபாஷ்குமாரை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 

ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் பந்து தாக்கியதில் 6ம் வகுப்பு படித்து வந்தத பள்ளி மாணவன் துடிதுதுடித்து உயிரிழந்த பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் அருகே உள்ள வன்னிவயல் கிராமத்தை சேர்ந்தவர் புரோட்டா மாஸ்டர் பழனிக்குமார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 6ம் வகுப்பு படித்து வரும் இவரது 3வது மகன் மகன்  சுபாஷ்குமார். இவர் தனது சக நண்பர்களுடன் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். 

அப்போது பீல்டிங்கில் நின்று கொண்டிருந்த போது மற்றொருவர் அடித்த பந்து அவரது நெஞ்சில் வலது புறம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சுபாஷ்குமாரை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 

ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!