
காஞ்சிபுரம்
தமிழகத்தில் வெளியான பிளஸ்–1 தேர்வு முடிவுகளில் காஞ்சிபுரத்திலும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 90 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ்–1 தேர்வை 21 ஆயிரத்து 453 மாணவர்களும், 25 ஆயிரத்து 99 மாணவிகளும் எழுதினர்.
இதில் 18 ஆயிரத்து 354 மாணவர்கள், 23 ஆயிரத்து 598 மாணவிகள் என மொத்தம் 41 ஆயிரத்து 952 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.55 சதவீதம் பேரும், மாணவிகள் 94.02 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 90.12 சதவீதம்.
அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் 116 பள்ளிகளில், 7 ஆயிரத்து 277 மாணவர்களும், 10 ஆயிரத்து 839 மாணவிகளும் மொத்தம் 18 ஆயிரத்து 116 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 4 ஆயிரத்து 999 மாணவர்களும், 9 ஆயிரத்து 591 மாணவிகளும் என 14 ஆயிரத்து 590 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 80.54 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
நகராட்சி பள்ளிகளை பொறுத்தவரையில் மாணவர்கள் 395, மாணவிகள் 376 என மொத்தம் 771 பேர் தேர்வு எழுத்தினர். இதில் 319 மாணவர்கள், 352 மாணவிகள் என 671 பேர் தேர்ச்சியடைந்தனர். மொத்தம் 87.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர்கள் 344, மாணவிகள் 356 பேர் என மொத்தம் 700 பேர் தேர்வு எழுதினர். இதில் 247 மாணவர்களும், 311 மாணவிகளும் என 558 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மொத்தம் தேர்ச்சி சதவீதம் 79.71 ஆகும்,
சமூகநலத்துறைப் பள்ளிகள் மாணவர்கள் 13, மாணவிகள் 39 மொத்தம் 52 பேர் தேர்வு எழுதினர். இதில் 13 மாணவர்களும், 36 மாணவிகளும் என 49 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் தேர்ச்சி சதவீதம் 94.23 ஆகும்.
முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் 2 ஆயிரத்து 745, மாணவிகள் என 2 ஆயிரத்து 936 மொத்தம் 5 ஆயிரத்து 681 பேர் தேர்வு எழுதினர். இதில் 2 ஆயிரத்து 294 மாணவர்களும், 2 ஆயிரத்து 841 மாணவிகளும் என 5 ஆயிரத்து 135 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் தேர்ச்சி சதவீதம் 90.39 ஆகும்.
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 9 ஆயிரத்து 694 பேரும், மாணவிகள் 8 ஆயிரத்து 730 பேரும் என மொத்தம் 18 ஆயிரத்து 424 பேர் தேர்வு எழுதினர். இதில் 9 ஆயிரத்து 556 மாணவர்கள், 8 ஆயிரத்து 675 மாணவிகள் என 18 ஆயிரத்து 231 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 98.95 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.