பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தத் தடை: உணவு பாதுகாப்புத் துறை அதிரடி!

Published : Jun 18, 2025, 06:41 PM IST
best summer juice for glowing skin 5 morning beverages to sip daily

சுருக்கம்

ஜூஸ் கடைகள், உணவகங்கள் மற்றும் இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்துவதை உணவு பாதுகாப்புத் துறை தடை செய்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல பாதிப்பைக் கருத்தில் கொண்டு காகித ஸ்ட்ராக்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூஸ் கடைகள், உணவகங்கள் மற்றும் இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தக் கூடாது என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களின் பயன்பாட்டைத் தடுக்க இந்த நடவடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு மாற்று:

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்குப் பதிலாக காகித (பேப்பர்) ஸ்ட்ரா அல்லது சில்வர் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு:

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன. இவை மக்கும் தன்மை அற்றவை என்பதால், கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவு மேலாண்மை பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கின்றன என்றும் உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. சில நாடுகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே உள்ள உத்தரவுகள்:

உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களில் மற்றும் நிறம் கலந்த சில்வர் பேப்பர்களில் உணவுகளைப் பார்சல் செய்யக்கூடாது என ஏற்கனவே உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஜூஸ் கடைகளில் வழங்கக்கூடிய ஜூஸ் ஸ்ட்ராக்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடும் நடவடிக்கைக்கான எச்சரிக்கை:

இந்தச் சூழலில், ஜூஸ் கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை உடனடியாக நிறுத்த வேண்டும். உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின்படி, பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்:

ஜூஸ் கடை உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் இளநீர் கடை உரிமையாளர்கள் இந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டும். தவறினால், உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Tamil News Live today 06 December 2025: அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி