
இராமநாதபுரம்
பரமக்குடியில் உள்ள சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ள பிளாஸ்டிக் முட்டைகோஸ்கள் மக்களிடம் டர்ரை கிளப்பியுள்ளது.
உலகம் இதுவரை இப்படி ஒரு பிரச்சனையை சந்தித்தது இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் உணவுப் பொருட்களில் கூட புதுமையை புகுத்துகிறேன் பேர்வழி என்று விதவிதமான நோய்களை மக்களுக்கு வழங்குகின்றனர் அறிவியலாளர்கள்.
இயற்கை உணவு, இயற்கை விவசாயம் போன்றவற்றின் அருமை புரிந்து பெரும்பாலானோர் பழமைக்கே திரும்புகின்றனர்.
தமிழகத்தில் விவசாயம் நாளுக்கு நாள் நலிவுற்று வரும் நிலையில் கூட மக்கள் காய்கறி மற்றும் சிறுதானிய உணவுகளை விரும்புவதால் விவசாயிகள் முட்டைகோஸ், வெண்டைக்காய், தக்காளி, கீரை வகைகள், மற்றும் சிறுதானியங்களை உற்பத்தி செய்து மக்களையும், தங்களையும் பிழைக்க வைக்கின்றனர்.
சந்தைகளில் விற்பனைக்கு வரும் தோட்டத்து காய்கறிகள்தான் மக்களின் தேவையை பெரிதும் பூர்த்தி செய்கிறது.
கொஞ்ச நாள்களுக்கு முன்பு சீனா பிளாஸ்டிக் முட்டையை வெளியிட்டு உலக மக்களிடையே நவீன பனிப் போரை உருவாக்கியது.
அதனைத் தொடர்ந்து சீனாவின் செயற்கை ஆட்டுக் கறியையும் வெளியிட்டது.
சரி காய் கறிகளில் எந்தவித போலித்தனத்தையும் சீனாவில் அரங்கேற்ற முடியாது என்று பெருமூச்சி விட்ட நேரத்தில் சீனா பிளாஸ்டிக் முட்டைகோஸ் வெளியிட்டு மக்களை உச்சக்கட்ட அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பரமக்குடி பெரிய கடை சந்தை, சந்தைக்கடை, சந்தைவெளி போன்றவற்றில் இந்த பிளாஸ்டிக் முட்டைகோஸ் விற்பனை செய்யப்படுகிறது என்று புகார் வந்தது.
நேற்று பரமக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் முகுந்தன் என்பவர் உழவர் சந்தையில் உள்ள காய்கறி கடை ஒன்றில் முட்டைகோஸ் வாங்கிச் சென்றுள்ளார். அதனை அவரது மனைவி சமைப்பதற்காக எடுத்து நறுக்கியபோது வித்தியாசமாக இருந்துள்ளது. இதையடுத்து தனது கணவரிடம் காண்பித்துள்ளார்.
ஏற்கனவே பிளாஸ்டிக் முட்டைகோஸ் பற்றி இணையதளம் மூலம் அறிந்திருந்த முகுந்தன் அதனை நெருப்பில் காட்டியபோது அது உருகியுள்ளது. அது பிளாஸ்டிக் முட்டைகோஸ் என்பதை உறுதி செய்த அவர் இதுபற்றி தனது நண்பர் வழக்கறிஞர் கணேசனுடன் பரமக்குடி நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று சுகாதார அதிகாரி சீனிவாசனிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும், பரமக்குடி நகரில் அதிரடி சோதனை நடத்தி மக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் முட்டைகோஸ் விற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.
இயற்கை விவசாயத்தை தொலைத்து விட்ட மக்கள் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் முட்டைகோஸ், போலி மருந்துகள் என இன்னும் என்னென்ன சவால்களை சந்திக்க வேண்டியிருக்குமோ?
இப்போதாவது விழித்துக் கொண்டு விவசாயத்திற்கு கைக் கொடுப்போம். இல்லையேல், பிளாஸ்டிக் மனிதனாக நம்மையும் மாற்றிவிடுவார்கள்.